/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
/
ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
ADDED : அக் 23, 2024 06:22 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக, ஆண்டுதோறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்துகிறது.
இதையொட்டி, இந்தாண்டு நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கும் மாநாடு நடைபெறவுள்ளது.
இதில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்கள் பங்கேற்று, தங்களின் ஆய்வு கட்டுரையை தங்கள் பள்ளியின் வழிகாட்டி ஆசிரியர்களோடு சமர்ப்பிக்கலாம். இந்த வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மாவட்ட பயிற்சி முகாம் விழுப்புரம் நியூ ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். துணை தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். பேராசிரியர்கள் பீமதனஞ்ஜெயன், வினோத்குமார், கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகன், குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சிவமுருகன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர். மாவட்டம் முழுதும் இருந்து 200 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மாநில குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், ஆய்வு தன்மை பற்றி கலந்துரையாடினார்.
துணை தலைவர் அய்யனார், வானவில் மன்ற கருத்தாளர் எட்டியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சுகதேவ் நன்றி கூறினார்.