/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயறு வகை உற்பத்தி அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
/
பயறு வகை உற்பத்தி அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
பயறு வகை உற்பத்தி அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
பயறு வகை உற்பத்தி அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : நவ 13, 2025 10:45 PM

செஞ்சி: வல்லம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பயிறு வகை உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பம் குறித் தும், மண் வள பாதுகாப்பு குறித்தும் பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார். உதவி இயக்குநர் சரவணன் வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., விவசாயிகளுக்கு மானிய விலையில் விசைத்தளிப்பான், உளுந்து விதைகள், தார்பாய்கள், மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.
உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சிவா, துணைச் சேர்மன் மலர்வழி அண்ணா துரை, ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி, வேளாண்மை அலுவலர் முருகன், கால்நடை உதவி இயக்குநர் தண்டபாணி.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கவுதமன், உதவி வேளாண் அலுவலர் திலகவதி, இளநிலை பொறியாளர் தணிகைவேல் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள், பட்டு வளர்ச்சி துறை அதிகார்கள் பங்கேற்றனர்.
தொழில் நுட்ப மேலா ளர் சுபாஷ் சந்திரபோஸ் நன்றி கூறினார்.

