/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டிய இரண்டு பேர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டிய இரண்டு பேர் கைது
ADDED : நவ 13, 2025 10:45 PM
விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிழக்கு பாண்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, 42; இவர், தனது பைக்கில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வந்தது தெரியவந்தது. விழுப்புரம் டவுன் போலீ சார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி கெடார் சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அத்தியூர் திருக்கை பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தவரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் ஒடுவன்குப்பத்தை சேர்ந்த முரளி, 32: என தெரியவந்தது.போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

