ADDED : நவ 08, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே திருநங்கை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, பூமியான்பேட்டை, புது தெருவைச் சேர்ந்தவர் செல்வி, 48; திருநங்கை. இவர் சென்னையில் ரஞ்சித் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
கடந்த 4ம் தேதி செல்விக்கு உடல் நிலை சரியில்லாமல் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் பிற்பகல் சென்னையிலிருந்து காரில் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த சலவாதி கூட்ரோட்டிலுள்ள டீக்கடைக்கு வந்த செல்வி மயங்கி விழுந்தார். உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் செல்வி இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.