ADDED : ஜூலை 23, 2025 02:27 AM

விழுப்புரம், : கோழிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 25ம் ஆண்டு வெள்ளி விழா, திறன் வகுப்பறை திறப்பு விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என முப்பெரும் விழா நடந்தது.
விழாவில், முன்னாள் மாணவர்கள் பங்களிப்போடு 1.3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 75 அங்குல திறன் பலகை மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு பெட்டகம், நன்கொடை வழங்கப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் சித்ரா வரவேற்றார். முன்னாள் ஆசிரியர்கள் முருகன், மாரிமுத்து, முருகன், செல்வி, ரமேஷ், ராஜநிலா, ராஜி, கமலா, கிரேசி ஜாக்குலின், வரதராஜன் பேசினர்.
பின், முன்னாள் மாணவர்கள், தங்களின் பள்ளி நினைவுகளை பகிர்ந்தனர். ஆசிரியர்கள் சுதா, கிரேசி, சேகர், குணசேகர், சிவபிரகாசம், ஆசிபா, ஜெயராமன், கோமதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சலேத்மேரி நன்றி கூறினார்.