ADDED : ஆக 02, 2025 07:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : கொத்தமங்கலம் அரசுப்பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு மற்றும் உலக இயற்கை பாதுகாப்பு தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் அம்புரோஸ், ஜெயராஜ், புருஷோத்தமன், கோவிந்தன், ஆய்வக உதவியாளர் குமரவேல் முன்னிலை வகித்தனர். பிரபு வரவேற்றார்.
விழாவில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர் மத்திய ஒன்றிய தி.மு.க., செயலாளர் செழியன், ஒன்றிய பொருளாளர் பழனி, ஊராட்சி தலைவர் மல்லிகா பூபதி, பிரதிநிதிகள் கண்ணாயிரம், முருகதாஸ், கிளைச் செயலாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.