ADDED : ஜன 10, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மணக்குப்பம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த பெரிய சேவல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சண்முகம், 45; சாரங்கபாணி, 59; ஆகிய இருவரையும் கைது செய்து மணல் கடத்தி வைத்திருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.