/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பில்லி சூனியம் எடுப்பதாக கூறி பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி; வானுார் அருகே கில்லாடிகள் இருவர் கைது

ADDED : பிப் 15, 2025 05:03 AM

வானுார் : வானூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், நூதன முறையில் நகைகளை பறிக்க முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மனைவி செல்வி, 55; இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், உங்கள் வீட்டிற்கு நேரம் சரியில்லை. பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த செல்வி, பரிகாரம் குறித்து கேட்டபோது, பில்லி சூனியத்தை எடுத்து, சரி செய்து தருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
அதனை நம்பிய செல்வி, வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். அந்த மர்ம நபர்கள் ஒரு வட்டத்தை போட்டு, அதில் நகைகளை கழற்றி வைத்துவிட்டு, கண்களை மூடும்படி செல்வியிடம் கூறியுள்ளனர். செல்வியும், நகைகளை கழற்றி வட்டத்திற்குள் வைத்து, கண்களை மூடியுள்ளார்.
உடன் இருவரும் நகைகளை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றதை பார்த்த செல்வி, கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் பிடித்தனர். தர்ம அடி கொடுத்து கிளியனுார் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் வேலுார் மாவட்டம், நெல்லுார்பேட்டையை சேர்ந்த ரவி, 46; செல்வம், 30; என்பதும், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகைகளை திருட முயன்றதும் தெரிய வந்தது.
வானுார் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.