தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இடி தாக்கி இருவர் பலி :செஞ்சி அருகே பரிதாபம்

இடி தாக்கி இருவர் பலி :செஞ்சி அருகே பரிதாபம்

இடி தாக்கி இருவர் பலி :செஞ்சி அருகே பரிதாபம்


UPDATED : நவ 07, 2026 06:10 PM

ADDED : நவ 07, 2026 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 06:10 PM ADDED : நவ 07, 2026 05:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஞ்சி: செஞ்சி அருகே இருவர் இடி தாக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செஞ்சி அருகே ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அய்யனார்,36; இவர், தையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்தமான நிலம் சொரத்துார் கிராமத்தில் உள்ளது.

இந்த நிலத்தில் இன்று (நவ.,7) நாற்று எடுக்கும் பணியில் தையூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் ராஜி,50; என்பவர் ஈடுபட்டிருந்தார். இவரோடு, அய்யனாரும் பணியில் இருந்தார்.

அப்போது அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில், இடி தாக்கியதில் இந்த இருவரும் மயங்கி விழுந்தனர்.

அந்த இருவரும், செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் இறந்ததாக தெரிவித்தனர். செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us