sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி: மரக்காணம் அருகே சோகம்

/

 குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி: மரக்காணம் அருகே சோகம்

 குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி: மரக்காணம் அருகே சோகம்

 குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி: மரக்காணம் அருகே சோகம்


PUBLISHED ON : பிப் 18, 2026 03:11 AM

Google News

PUBLISHED ON : பிப் 18, 2026 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் அருகே வெள்ளை மண் குவாரி குட்டையில் விழுந்து 2 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த பெரிய மண்டவாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரமுத்து மகன் சித்தரஞ்சன், 14: வெங்கடேசன் மகன் வெற்றிச்செல்வன் 14: இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர்.

மண்டவாய் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன் கனிமவளத் துறை மூலம் வெள்ளை மண் எடுக்கும் குவாரியை தனியார் நடத்தி வந்தனர். டெண்டர் காலம் முடிந்தவுடன் பள்ளம் போட்டு வெள்ளை மண் எடுக்கப்பட்ட இடங்களை சமன் செய்யாமல் அப்படியே விட்டுச் சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் உயிருக்கு ஆபத்தான பள்ளங்கள் இருந்தனர். இந்த பள்ளங்களில் தண்ணீர் இருந்த நிலையில், நேற்று மாலை சித்தரஞ்சன், வெற்றிச்செல்வன் ஆகிய இருவரும் நண்பர்களுடன் குளித்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்,.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மாணவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us