/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு
/
டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு
டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு
டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு
ADDED : அக் 03, 2025 05:44 AM

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் இறந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் வாஞ்சிநாதன், 18; திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார்.
விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை அடுத்த நொச்சலுார், கோவில்புரையூரைச் சேர்ந்தவர் சேட்டு மகன் ஞானேஸ்வரன்,16; அவலுார்பேட்டை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
உறவினரான இருவரும் நேற்று முன்தினம் இரவு பல்சர் பைக்கில் நொச்சலுாரில் இருந்து தாயானுாருக்கு சென்றனர். பைக்கை வாஞ்சிநாதன் ஓட்டினார்.
இரவு 7:30 மணியளவில் மோட்டூர் கிராமத்தின் வளைவு பகுதியில் சென்றபோது, பின்னோக்கி (ரிவர்சில்) வந்த பதிவெண் இல்லாத டிராக்டர் மீது பைக் மோதியது.
இதில், படுகாயமடைந்த வாஞ்சிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஞானேஸ்வர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நள்ளிரவு 12:30 மணிக்கு இறந்தார்.
புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.