/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் பலி
/
அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் பலி
ADDED : ஏப் 06, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் திருவெண்ணெய்நல்லுார் அருகே அடையாளம் தெரியாத முதியவர் வாகனம் மோதி இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர், பாரதி நகர் பகுதியில் மன நலம் பாதித்த 65 வயது மதிக்கதக்க முதியவர் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5:50 மணியளவில் அப்பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில்,சம்பவ இடத்திலேயே முதியவர் இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.