/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் சுகாதாரமற்ற கழிவறை: மாணவர்கள் அவதி
/
அரசு கல்லுாரியில் சுகாதாரமற்ற கழிவறை: மாணவர்கள் அவதி
அரசு கல்லுாரியில் சுகாதாரமற்ற கழிவறை: மாணவர்கள் அவதி
அரசு கல்லுாரியில் சுகாதாரமற்ற கழிவறை: மாணவர்கள் அவதி
ADDED : அக் 27, 2024 11:31 PM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உள்ள ஆண்கள் கழிவறை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விழுப்புரம், அரசூர், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
கல்லுாரிக்குள் உள்ள மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை சுத்தம் செய்யாமலும், உடைக்கப்பட்டும் சுகாதாரமற்ற பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற கழிவறையை பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாணவர்கள் நலன்கருதி கல்லுாரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவறையை சுத்தம் செய்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.