நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஆடுகள் இறப்பை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 4 மாதங்களுக்கும் மேல் உள்ள அனைத்து செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கால்நடைத்துறை மூலம் நடந்து வருகிறது.
கோலியனூர் ஒன்றியம் எருமணந்தாங்கலில் கால்நடை மருத்துவமனை சார்பில், செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. கால்நடை மருத்துவர் பாலாஜி குழுவினர் தடுப்பூசி செலுத்தினர்.