ADDED : அக் 05, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம், வள்ளலார் அருள்மாளிகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் அவதார நாள் விழா நடந்தது.
இந்த விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு அருள்ஜோதி விளக்கு ஏற்றுதல், 6:30 மணிக்கு அகவல் பாராயணம் நடந்தது.
தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கொடி ஏற்றுதல் மற்றும் காலை 10:00 மணிக்கு 'பிறப்பும், இறப்பும் வரக்காரணம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
இதில் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர்மன்ற கவுன்சிலர்கள் புருஷோத்தமன், வசந்தா அன்பரசு, தி.மு.க., நகர செயலாளர் வெற்றிவேல், வள்ளலார் அருள்மாளிகை தலைவர் நீலமேகவண்ணன், பொருளாளர் ஞானவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.