UPDATED : நவ 10, 2026 10:35 AM
ADDED : நவ 10, 2026 10:32 AM
அ நிறம் | அளவு
அவலுார்பேட்டை: வளத்தி அடுத்த சாத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மார்டின் மகன் பால் பர்னபாஸ், 24; வேன் டிரைவர். இவர், கடந்த 7ம் தேதி இரவு 7:30 மணிக்கு தேவனுார் மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்ற 18 வயது பெண்ணிடம் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி திட்டி தாக்கியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து பால் பர்னபாசை கைது செய்தனர்.
