/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தென் மாவட்டங்களுக்கு வாகனங்கள் அணிவகுப்பு: தொடர் விடுமுறை எதிரொலி
/
தென் மாவட்டங்களுக்கு வாகனங்கள் அணிவகுப்பு: தொடர் விடுமுறை எதிரொலி
தென் மாவட்டங்களுக்கு வாகனங்கள் அணிவகுப்பு: தொடர் விடுமுறை எதிரொலி
தென் மாவட்டங்களுக்கு வாகனங்கள் அணிவகுப்பு: தொடர் விடுமுறை எதிரொலி
ADDED : டிச 22, 2024 06:52 AM

விக்கிரவாண்டி : தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமானோர் புறப்பட்டு சென்றதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, வரும் 24ம் தேதி முதல் ஜன. 1ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. நேற்று சனி, இன்று ஞாயிறு விடுமுறை என்பதால், சென்னையில் பணிபுரியும் தென் மாவட்ட மக்கள் பலர் நேற்றே பஸ், கார், வேன், பைக் என பல வாகனங்களில் புறப்பட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகளவில் வாகனங்கள் அணிவகுக்க ஆரம்பித்தன.
விக்கிரவாண்டி டோல்கேட்டில் மாவட்ட எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று இரவு 7 மணி வரை 35 ஆயிரம் வாகனங்கள் தென் மாவட்டங்களுக்கு டோல் பிளாசாவை கடந்து சென்றன. இது தினசரி போக்குவரத்தை விட 11 ஆயிரம் வாகனங்கள் கூடுதல் ஆகும்.