/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற விஜய் கட்சியில் புதிய 'வியூகம்'
/
அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற விஜய் கட்சியில் புதிய 'வியூகம்'
அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற விஜய் கட்சியில் புதிய 'வியூகம்'
அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற விஜய் கட்சியில் புதிய 'வியூகம்'
ADDED : டிச 24, 2024 06:06 AM
தமிழக அரசியலில், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வியூகத்தை நடிகர் விஜய் தரப்பில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மிக பிரமாண்டமான வகையில், த.வெ.க., மாநாட்டை நடத்தி, நடிகர் விஜய் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார்.
இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதைத் தொடர்ந்து, அரசியல் களம் சூடு பிடித்தது.
தமிழகத்தில் மாற்று அரசியலை முன் வைத்தவர் விஜயகாந்த். அந்த வெற்றிடத்தை நிரப்பும் வாய்ப்பு, விஜய்க்கு பிரகாசமாக உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் கவனமாக செயல்பட்டால், நடிகர் விஜய் வெற்றியை பெற வாய்ப்புள்ளதாக நடுநிலையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
நடிகர் விஜய் கட்சியில் சேர்வதற்கு, மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் (எஸ்.பி., - ஏ.டி.எஸ்.பி., ரேங்க்) பட்டியல் தயாராகி உள்ளது.
அரசியல் கட்சிகளின் செயல்பாடு, செல்வாக்கு, அரசியல் நகர்வுகள் குறித்த துல்லியமான கணிப்பு மற்றும் அனுபவம், இவர்களுக்கு அத்துப்படி. இவர்கள் மூலம், கட்சி நிர்வாகிகளின் பின்புலம், செயல்பாடு குறித்து தெளிவான ரிப்போர்ட் கிடைக்கும்.
தமிழகம் முழுவதும், நடிகர் விஜய் கொள்கையில் பிடிப்புள்ள ஓய்வு பெற்ற 20 போலீஸ் உயர் அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, வடமாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., ஒருவர் கவனிப்பதாக கட்சி வட்டாரத்தில் கூறப் படுகிறது.
திருநெல்வேலி வரை சென்று சொந்த ஊருக்குத் திரும்பிய, இந்த ஓய்வு பெற்ற அதிகாரி, ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளை கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறார். -நமது நிருபர்-