/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிளஸ் 2 தேர்ச்சியில் முன்னேற்றம் விழுப்புரம் கலெக்டர் பெருமிதம்
/
பிளஸ் 2 தேர்ச்சியில் முன்னேற்றம் விழுப்புரம் கலெக்டர் பெருமிதம்
பிளஸ் 2 தேர்ச்சியில் முன்னேற்றம் விழுப்புரம் கலெக்டர் பெருமிதம்
பிளஸ் 2 தேர்ச்சியில் முன்னேற்றம் விழுப்புரம் கலெக்டர் பெருமிதம்
ADDED : மே 09, 2025 12:24 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக கலெக்டர் பெருமிதம் தெரிவித்துள்ளார.
விழுப்புரம் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் நேற்று வெளியிட்ட பின், கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு 9,851 மாணவர்கள், 10,675 மாணவியர் என 20,526 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன் மூலம் 95.11 சதவீதம் வெற்றி பெற்று, மாநில அளவில் 18வது இடத்திற்கு வந்துள்ளது. அரசு பள்ளியளவில் 93.71 சதவீதம் தேர்ச்சி பெற்று, 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் இணைந்து தொடர் ஊக்க நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தொடர் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கியதாலும், தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்போடு கூடிய கற்பித்தல் பணியும், சிறப்பு வகுப்புகள், வாராந்திர குறுந்தேர்வுகள், மெல்ல கற்போருக்கு சிறப்பு கற்றல் பயிற்சிகள் என பல கட்ட பயிற்சிகள் வழங்கியதும் காரணமாகும்.
பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து, பள்ளிக்கு வரவழைத்ததும் பயன் தந்துள்ளது. மாணவர்களின் உழைப்பும், பெற்றோர்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரண மாகும். இந்த தேர்வு இறுதி முடிவல்ல.
அடுத்த ஜூன் மாதம் உடனடி தேர்வு நடைபெற உள்ளது. விடுபட்ட மாணவர்கள், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை மேம்படுத்தவும், மாதாந்திர ஆய்வு கூட்டங்களும் நடத்தி மேலும் தேர்ச்சி சதவீதத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு வராமல் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகவேல், சேகர், சிவசுப்ரமணி, ஆனந்தகிருஷ்ணன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

