/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
20 ஆண்டுகளாக காங்., எம்.எல்.ஏ., இல்லை: இதே நிலை நீடித்தால் 'கை' காணாமல் போகும்
/
20 ஆண்டுகளாக காங்., எம்.எல்.ஏ., இல்லை: இதே நிலை நீடித்தால் 'கை' காணாமல் போகும்
20 ஆண்டுகளாக காங்., எம்.எல்.ஏ., இல்லை: இதே நிலை நீடித்தால் 'கை' காணாமல் போகும்
20 ஆண்டுகளாக காங்., எம்.எல்.ஏ., இல்லை: இதே நிலை நீடித்தால் 'கை' காணாமல் போகும்
ADDED : செப் 01, 2025 11:17 PM
வி ழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 20 ஆண்டுகளாக காங்., சார்பில் எம்.எல்.ஏ., வெற்றி பெற வாய்ப்பின்றி, கட்சியினர் பரிதவித்து வருகின்றனர். விழுப்புரம் தொகுதியில், காங்., சார்பில் 1971ம் ஆண்டு தேர்தலில் சாரங்கபாணி வெற்றி பெற்றார்.
செஞ்சி தொகுதியில் ராஜாராம் (1952), முருகானந்தம் (1984), எஸ்.எஸ்.ராமதாஸ் (1991) ஆகியோர் வெற்றி பெற்றனர். திண்டிவனம் தொகுதியில் திண்டிவனம் ராமமூர்த்தி (1967), ராஜாராம் ரெட்டி (1977), தங்கமணி (1980, 1984) பன்னீர்செல்வம் (1991) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ரிஷிவந்தியம் தொகுதியில் சுந்தரம் (1977, 1980), சிவராஜ் (1984, 1996, 2001, 2006) ஆகியோர் வெற்றி பெற்றனர். மேல்மலையனுார் தொகுதியில் ஜானகிராமன் (1991) வெற்றி பெற்றார்.
கடந்த 1991ம் ஆண்டு தேர்தலில், செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனுார் ஆகிய தொகுதிகளில் காங்., வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பின், 2006ம் ஆண்டில் ரிஷிவந்தியம் தொகுதியில், காங்., சார்பில் சிவராஜ் வெற்றி பெற்றார். அடுத்த 20 ஆண்டுகளாக ஒரு தொகுதியில் கூட காங்., வெற்றி பெறவில்லை.
இதேபோல், கடலுார், திண்டிவனம் லோக்சபா தொகுதிகளில் கோலோச்சிய காங்., கட்சி தொடர்ந்து எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்றது. தற்போது தொகுதி மறுசீரமைப்பில் விழுப்புரம் எம்.பி., தொகுதியாக மாற்றப்பட்டதும், காங்., கட்சியிடமிருந்து எம்.பி., சீட் கை நழுவிப் போனது.
விழுப்புரம் மாவட்டத்தில், வரும் 2026ம் ஆண்டு தேர்தலில், காங்., கட்சிக்கு 'சீட்' ஒதுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் தீவிரமாக தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த முறையும் சீட் பெற தவறினால், கட்சியின் கை சின்னத்தை வாக்காளர்கள் மறந்து விடும் வாய்ப்புள்ளதாக மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.