/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புயல் பாதுகாப்பு மையத்தில் விழுப்புரம் எம்.பி., ஆய்வு
/
புயல் பாதுகாப்பு மையத்தில் விழுப்புரம் எம்.பி., ஆய்வு
புயல் பாதுகாப்பு மையத்தில் விழுப்புரம் எம்.பி., ஆய்வு
புயல் பாதுகாப்பு மையத்தில் விழுப்புரம் எம்.பி., ஆய்வு
ADDED : டிச 01, 2024 04:22 AM

விழுப்புரம் : கூனிமேடு குப்பத்தில் புயல் பாதுகாப்பு மையத்தில், ரவிக்குமார் எம்.பி., ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், கடலோர பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேலும், மரக்காணம் கடற்கரை பகுதியில் புயல் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மரக்காணம் அடுத்த கூனிமேடு குப்பத்தில் உள்ள பேரிடர் கால பன்நோக்கு பாதுகாப்பு மையத்தில், மீனவ மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பால் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவ மக்களை, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நேற்று நேரில் சந்தித்து,அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து கேட்டறிந்தார். வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.