/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில அளவிலான ஜூடோ போட்டி விழுப்புரம் மாணவர்கள் அசத்தல்
/
மாநில அளவிலான ஜூடோ போட்டி விழுப்புரம் மாணவர்கள் அசத்தல்
மாநில அளவிலான ஜூடோ போட்டி விழுப்புரம் மாணவர்கள் அசத்தல்
மாநில அளவிலான ஜூடோ போட்டி விழுப்புரம் மாணவர்கள் அசத்தல்
ADDED : ஆக 06, 2025 11:20 PM

விழுப்புரம்: திருவண்ணாமலை யில் நடந்த மாநில அளவிலான ஜூடோ போட்டியில், விழுப்புரம் மாணவர்கள் பதக்கம் வென்று சாதித்தனர்.
தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில், ஜூடோ சூப்பர் டிராபி போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. கடந்த 1ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்த போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து, 1300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 12 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.
இதில், ஜூனியர் பிரிவில் பங்கேற்ற விழுப்புரம் மாணவி கோகிலாம்பாள், சப் ஜூனியர் பிரிவில் கீர்த்தினி ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
சப் ஜூனியர் பிரிவில் லோகேஷ்வரன், மினி சப் ஜூனியர் பிரிவில் மித்ரன்கார்த்தி ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று, விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். பதக்கத்துடன் திரும்பிய குழுவினர், விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பயிற்சியாளர் குணசேகரன், உடற்கல்வி ஆசிரியர் லதா, மாவட்ட ஜூடோ சங்க நிர்வாகிகள் முருகன், இளமுருகன்ஆகியோர் உடனிருந்தனர்.