/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
/
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ADDED : மார் 31, 2025 07:33 AM
மயிலம் : ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி, மயிலம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் கூட்டேரிப்பட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தெற்கு ஒன்றிய செயலாளர் சேதுநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, தீர்மானக் குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அவைத் தலைவர் சேகர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் செல்வ குமார் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன் துவக்க உரையாற்றினர். மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராமன், பிரகாஷ், முன்னாள் பால் கூட்டுறவு இயக்குநர் சாரங்கபாணி, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் சுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர்கள் விஜயன், விவசாய அணி பாஸ்கர், ஏழுமலை, ராஜா, குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.