/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி
/
தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி
ADDED : ஜூன் 10, 2025 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; செஞ்சியில் தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி 102 நபர்களுக்கு கண் கண்ணாடி, தலா ஒருவருக்கு தையல் மெஷின்,மிதிவண்டி, சலவை பெட்டி வழங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், கவுன்சிலர்கள் சங்கர், பொன்னம்பலம், தொண்டரணி பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.