தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வாகனங்கள் குறுக்கே செல்வதை கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்படுவது எப்போது? திண்டிவனம்-மயிலம் ரோட்டில் விபத்தை தடுக்க நடவடிக்கை தேவை

வாகனங்கள் குறுக்கே செல்வதை கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்படுவது எப்போது? திண்டிவனம்-மயிலம் ரோட்டில் விபத்தை தடுக்க நடவடிக்கை தேவை

வாகனங்கள் குறுக்கே செல்வதை கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்படுவது எப்போது? திண்டிவனம்-மயிலம் ரோட்டில் விபத்தை தடுக்க நடவடிக்கை தேவை


UPDATED : நவ 17, 2026 03:52 AM

ADDED : நவ 16, 2026 09:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 03:52 AM ADDED : நவ 16, 2026 09:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம்-மயிலம் ரோடு, நான்கு வழிச்சாலையிலுள்ள சென்டர் மீடியனில் சாலையை கடக்க இடைவெளி விடப்பட்டுள்ளதால், தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்திலிருந்து(திண்டிவனம்-மயிலம் ரோடு)நகர எல்லை வரையிலான நான்கு வழிச்சாலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் சென்டர் மீடியன் போடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சென்டர் மீடியன் பகுதி முழுவதும் இடைவெளி இல்லாமல் மூடப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மயிலம் ரோட்டிலிருந்து நகர எல்லை பகுதிவரை சென்று அங்கு 'யூ-டர்ன்' போட்டுத்தான் திரும்பி வரமுடியும்.

ஆனால் தற்போது திண்டிவனம் மேம்பால பஸ் நிலையத்திலிருந்து நகர எல்லை வரை உள்ள சாலையில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் சென்டர் மீடியனில் சாலையை வாகனங்கள் குறுக்கே புகுந்து கடந்து செல்லும் வழியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பிரத்யேக வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சென்டர் மீடியன் மூடப்பட்டிருந்த சமயத்தில் விபத்துகள் நடக்காமல் இருந்தது. தற்போது சென்டர் மீடியனில் வாகனங்கள் செல்வதற்கு வழி உள்ளதால், தினந்தோறும் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் சென்டர் மீடியன் வழி உள்ள இடத்தை பைக்கில் கடந்த போது, விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் மோதியதில் கணவர் கண் முன்னே மனைவி பலத்த அடிபட்டு இறந்தார் .

இதே போல் நேற்று காலை 11:00 மணியளவில் விழுப்புரத்திலிருந்து திண்டினம் நோக்கி பைக்கில் சஞ்சிவீராயன்பேட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கருப்பசாமி, 28; என்பவர், மயிலம் ரோட்டிலுள்ள தனியார் வாகன ேஷாரூம் அருகே வந்தார். அப்போது, அங்குள்ள மெக்கானிக் ஷாப்பிலிருந்து சாலையின் குறுக்கே புகுந்த டாடா ஏஸ் வாகனம் மீது பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அந்த வாலிபரின் இரண்டு கால்களிலும் பலத்த அடிபட்டு ஆபத்தான நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையில் திண்டிவனம் நகரப்பகுதியில், திண்டிவனம்-மரக்காணம் நான்கு வழிச்சாலையில் ஆரம்பத்தில் சென்டர் மீடியனில் வாகனங்கள் செல்வதற்காக இடம் விடப்பட்டது.

ஆனால் வாகனங்கள் குறுக்கே கடக்கும் போது அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்தது.

இதை தொடர்ந்து திண்டிவனம்-மரக்காணம் நான்கு வழிச்சாலையிலுள்ள சென்டர் மீடியனில் குறுக்கே வாகனங்கள் செல்வதற்காக விடப்பட்டிருந்த இடங்களில் நான்கு அடி உயரத்திற்கு கான்கிரீட் சுவர்கள் வைக்கப்பட்டது.

இதனால் வாகனங்கள் குறுக்கே புகுந்து செல்வது தடுக்கப்பட்டதால், விபத்துகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிட்டது.

அதே போல் திண்டிவனம் மேம்பால பஸ் நிலையத்திலிருந்து ஜக்காம்பேட்டை நகர எல்லை வரையிலுள்ள நான்கு வழிச்சாலையில், குறுக்கே வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் நிரந்தரமாக தடுப்பு சுவர் அமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us