/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிடங்கல் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படுவது... எப்போது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
/
கிடங்கல் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படுவது... எப்போது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
கிடங்கல் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படுவது... எப்போது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
கிடங்கல் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படுவது... எப்போது? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
ADDED : ஜூலை 29, 2025 11:50 PM

திண்டிவனத்திலுள்ள பழமை வாய்ந்த கிடங்கல் ஏரியானது, திண்டிவனம் ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, முருங்கப்பாக்கம் ஏரி ஆகியவற்றை விட பரப்பளவில் பெரியது. அந்த ஏரியின் பரப்பளவு மட்டும், 975 ஏக்கர் ஆகும். இந்த கிடங்கல் ஏரியின் மூலம் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்த ஏரியின் உபரி நீர் விவசாய பாசனத்திற்கு பிறகு, 50 கி.மீ., துாரம் சென்று மரக்காணம் அருகே கழுவெளியை அடைந்து கடலில் கலந்தது.
இந்த ஏரியில், 15 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, நிலத்தடி நீர் ஆதாரத்தை இழந்து வருகிறது.
ஏரியின் நீர்வரத்து வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைக் காலங்களில் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில், ஏராளமான கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து திண்டிவனம் நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீர்பிடிப்பு பகுதியான கிடங்கல் ஏரியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளவர்களுக்கு கடந்த, 2018ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி முறைப்படி 'நோட்டீஸ்' தனித்தனியாக வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் மாற்று இடம் வழங்கினால் தான் இடத்தை காலி செய்வற்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மூலம் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தருவதற்கு முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படாமல் உள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கும் பிரச்னை முடிந்த உடன், கிடங்கல் ஏரியின் ஆக்கிரமிப்புகள் வருவாய்த்துறை ஒத்துழைப்புடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' நீர் வரத்து வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைக் காலங்களில் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால், மாவட்ட நிர்வாகம் கிடங்கல் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.