/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?: மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?: மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?: மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?: மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 14, 2025 07:24 AM
விழுப்புரம், ஜன. 14- மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சம்பா தாளடி பருவ நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு போதிய அளவிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில், சம்பா - தாளடி பருவ நெல் கொள்முதலுக்காக டிசம்பர் மாத இறுதி முதல் அதிகளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கம்.
இந்தாண்டு, ஜனவரி மாதம் துவங்கி இரு வாரங்களாகியும் இதுவரை போதிய அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
பெயரளவிற்கு, ஒரு சில இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அங்குகூட, இடப்பற்றாக்குறை காரணம் காட்டி, நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 60 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் சம்பா பட்ட நெல் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாரான நிலையில் கடந்த மாதம் மாவட்டத்தில் தாக்கிய பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால், விவசாய பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
கனமழை பாதிப்பில் இருந்து தப்பிய நெல் கதிர்களை அறுவடை செய்தும், போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், இடைத்தரகர்களிடம் மிகக் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில், போதிய அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.