/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ. 17 கோடியில் 458 வீடுகள் மயிலத்தில் பணி ஆணை வழங்கல்
/
ரூ. 17 கோடியில் 458 வீடுகள் மயிலத்தில் பணி ஆணை வழங்கல்
ரூ. 17 கோடியில் 458 வீடுகள் மயிலத்தில் பணி ஆணை வழங்கல்
ரூ. 17 கோடியில் 458 வீடுகள் மயிலத்தில் பணி ஆணை வழங்கல்
ADDED : ஏப் 22, 2025 04:59 AM

மயிலம்: மயிலத்தில் 458 பயனாளிகளுக்கு, ரூ. 17 கோடி மதிப்பில, வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
மயிலம் ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டம் மூலம் காங்கீரிட் வீடுகள் கட்டி தரும் திட்டத்தின் கீழ், 410 பயனாளிகளுக்கு, ரூ.14.57 கோடி மதிப்பிலும், பி.எம்., ஜென்மன் திட்டத்தின் மூலம் மலைவாழ் மக்கள் 48 பயனாளிகளுக்கு, ரூ.2.44 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா ரெட்டணையில் நடந்தது.
ஆரணி எம்.பி., தரணிவேந்தன், மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணி ஆணைகளை வழங்கினர். மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார், மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மணிமாறன் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய கவுன்சிலர் கிஷோர் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாநில நிர்வாகி செஞ்சி சிவா, ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன், மாவட்ட பிரதிநிதி சேகர், விவசாய அணி பாஸ்கர், இளைஞர் அணி சம்சுதீன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பு சேகர், தீவனூர் ஒன்றிய கவுன்சிலர் பரிதா சம்சுதீன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.