ADDED : அக் 28, 2026 04:59 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: வளவனுாரில் தொழிலாளி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த வளவனுார் பகுதியைச் சேர்ந்தவர் ரவி மகன் சூர்யா, 28; கூலித் தொழிலாளி. இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
சூர்யா அடிக்கடி குடித்துவிட்டு வந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இன்று (அக்.,28) காலை சூர்யா குடித்துவிட்டு வந்ததால், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சூர்யா வீட்டின் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
