ADDED : ஜன 07, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே தளவானுார் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக நேற்று தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
தளவானுார் கிராமத்தில், டேங்க் தெருவை சேர்ந்த சரவணன் மகன் தணிகைவேல்,20; என்பவர், தனது வீட்டு அருகே கஞ்சா பொட்டலங்களை பதுக்கி, விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 1 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.