/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
/
காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
ADDED : நவ 12, 2025 10:36 PM

திண்டிவனம்: காரில் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மயிலம் அருகே உள்ள கோரைக்கேணி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்த சவர்லைட் டவேரா காரை (டிஎன்.25ஏக்யூ1806) போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் புதுச்சேரியில் வாங்கிய 280 குவாடர் மதுபாட்டில் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் காரை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த புதுச்சேரி மாநிலம், திருக்கனுாரை சேர்ந்த கருணாநிதி மகன் கார்த்தி, 25; என்பவரை கைது செய்தனர்.
பின்னர் திண்டிவனம் மதுவிலக்கு போலீசார் கார்த்தியை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

