ADDED : ஜூலை 29, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்; புதுச்சேரியில் இருந்து ம ரக்காணத்திற்கு மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம் அடுத்த அனுமந்தையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மொபட்டில், வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்ததில், 100 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்து தெரிந்தது.
போலீசார் விசாரணையில் அவர் கோமுட்டி சாவடியை சேர்ந்த காலப்பன் மகன் விஸ்வகேது, 40; என தெரிய வந்தது.
இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.