/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது
ADDED : நவ 20, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மற்றும் போலீசார் பனையபுரம் கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தவரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பனையபு ரத்தை சேர்ந்த விக்ரம், 21;என தெரியவந்தது.போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து காவலில் வைத்தனர்.

