/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒர்க் ஷாப் உரிமையாளரை மிரட்டிய வாலிபர் கைது
/
ஒர்க் ஷாப் உரிமையாளரை மிரட்டிய வாலிபர் கைது
ADDED : மார் 19, 2025 04:36 AM
வானுார் : புதுச்சேரி மாநிலம், முதலியார்பேட்டை ஏரிக்கரை வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 30; இவர், வானுார் அடுத்த மொரட்டாண்டி டோல்கேட் அருகில் ஆட்டோ டீசல் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இங்கு சென்னையைச் சேர்ந்த சரவணன், 26; என்பவர் மெக்கானிக் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
இவர், ரஞ்சித்திடம் மொபைல் போன் கேட்டதால், அவர் தனது மனைவி யின் பெயரில், மாத தவணையில் மொபைல் போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ரஞ்சித்குமாரின் ஒர்க் ஷாப்பில் உள்ள இரும்பு பொருட்கள், விலை உயர்ந்த மெஷின்கள் காணாமல் போனது.
இது குறித்து ரஞ்சித்குமார், தன்னிடம் வேலை செய்து வந்த சரவணனிடம் கேட்டுள்ளார். அதற்கு நான் எந்த பொருளையும் எடுக்கவில்லை என கூறியதோடு, திடீரென சரவணன் வேலைக்கு வராமல் நின்று விட்டார்.
இதனால் சந்தேகமடைந்த ரஞ்சித்குமார், சரவணனின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆத்திரமடைந்த சரவணன், ரஞ்சித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசில் வழக்குப் பதிந்து, சரவணனை கைது செய்தனர்.