ADDED : ஜன 14, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் முத்துமல்லா மகன் வெங்கட்ராயல் 37. இவர், நேற்று காலை 9 மணிக்கு தனது வீட்டில் சுடுநீர் போடும் எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் கருவியில் மின்சாரத்தை நிறுத்தாமல் கவன குறைவாக தண்ணீர் சுட்டுவிட்டதா என சோதித்து பார்த்தார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து மயக்கம் அடைந்தார். அவரை, உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.