---- நெடுஞ்சாலையில் குழாய் உடைப்பு, சாக்கடையில் வீணாகும் குடிநீர்
---- நெடுஞ்சாலையில் குழாய் உடைப்பு, சாக்கடையில் வீணாகும் குடிநீர்
ADDED : ஆக 19, 2026 05:11 PM
ராஜபாளையம், ஆக. 20-
ராஜபாளையம் அருகே நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக குடிநீர் குழாய் சேதமடைந்து சாக்கடையில் வீணாகி வருவதை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் ரோட்டில் தாமிரபரணி குடிநீர் சப்ளை குழாய் ரோட்டின் நடுவே பதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் அழுத்தம் காரணமாக இப்பகுதியில் குழாய்கள் உடைப்பெடுத்து குடிநீர் வீணாவதுடன் மெயின் ரோடும் பள்ளமாகி வாகனங்கள் பாதிப்பிற்கு உள்ளாவது தொடர்கிறது.
இந்நிலையில் 15 நாட்களுக்கும் மேல் ரோட்டில் உள்ள குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் வீணாகி வருகிறது. இதனால் ஏற்பட்ட பள்ளத்தை இப்பகுதியினர் கட்டட கழிவுகளுடன் உள்ள மூடைகளை வைத்து தற்காலிகமாக மூடி வைத்துள்ளனர். பெரும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், டி.பி மில்ஸ் ரோட்டின் மாற்று பாதையாக இருந்து வருவதால் இங்கு வாகன போக்குவரத்தும் அதிகம்.
எனவே, ரோடு பெரிய அளவில் சேதமாவதற்கு முன் குடிநீர் வீணாவதை சீரமைக்க வேண்டும் என இப்பகுதியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
