/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--ராஜபாளையத்தில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் துவக்கம்
/
--ராஜபாளையத்தில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் துவக்கம்
--ராஜபாளையத்தில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் துவக்கம்
--ராஜபாளையத்தில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் துவக்கம்
ADDED : பிப் 18, 2024 12:44 AM
ராஜபாளையம்,: ராஜபாளையத்தில் 7 வருடங்களுக்கு பின் கிரேட் இந்தியன் சர்க்கஸ் நேற்று முதல் தொடங்கியுள்ளது. சங்கரன்கோவில் ரோடு புது பஸ் ஸ்டாண்ட் அருகே தொடங்கியுள்ள இதில் இந்தியா, ரஷ்யா, மலேசியா சர்க்கஸ் கலைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்துகின்றனர்.
பார்வையாளர்களை கவரும் வகையில் அந்தரத்தில் பறக்கும் ரஷ்யன் அக்ரோ பெட், உயிரை பணயம் வைத்து தலைகீழாக நடக்கும் ஸ்கை வாக், குதிரையின் மீது அமர்ந்து சாகச நிகழ்ச்சி, பயிற்சி பெற்ற வல்லுனர்களின் ஜிம்னாஸ்டிக், பிரேக் இல்லாத சைக்கிள் சாகசம், ஒட்டகங்கள், நாய்களின் கண்கவர் அணிவகுப்பு, கண்ணாடி உதவியுடன் குறி தவறாமல் துப்பாக்கி சூடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறுகிறது.
தினமும் மதியம் 1:00, மாலை 4:00 , 7:00 மணி என மூன்று காட்சிகளும், கட்டணமாக ரூ. 100, 150, 200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.