ADDED : ஆக 08, 2024 04:22 AM

சிவகாசி: சிவகாசியில் மாநகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடந்தது.
மாநகரச் செயலாளர் உதயசூரியன், மேயர் சங்கீதா தலைமை வகித்தனர். கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பகுதி செயலாளர் காளிராஜன், முன்னாள் நகர் துணைத் தலைவர் பொன் சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கந்தசாமி, வர்த்தக அணி இன்பம், சேவுகன், ஜெயக்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி சரவணகுமார், கவுன்சிலர்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஒன்றிய தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் தலைமை வகித்தார். கட்சியினர் கலந்து கொண்டனர்.
*விருதுநகர் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு தேசபந்து மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகராட்சி தலைவர் மாதவன், நகரச் செயலாளர் தனபாலன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அதன் பின் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.