/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--முழுமையாக செயல்படாத சுகாதார வளாகம், குடியிருப்பை சூழும் கழிவு நீர்--
/
--முழுமையாக செயல்படாத சுகாதார வளாகம், குடியிருப்பை சூழும் கழிவு நீர்--
--முழுமையாக செயல்படாத சுகாதார வளாகம், குடியிருப்பை சூழும் கழிவு நீர்--
--முழுமையாக செயல்படாத சுகாதார வளாகம், குடியிருப்பை சூழும் கழிவு நீர்--
ADDED : ஜன 09, 2024 12:50 AM
தளவாய்புரம், : செயல்படாத சுகாதார வளாகம், குடியிருப்பை சூழும் கழிவு நீர், சமுதாயக்கூட வசதியின்மை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி அருள் புத்துார் ஊராட்சி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அருள் புத்துார் ஊராட்சியில் கல்லுப்பட்டி, தெற்கு மீனாட்சிபுரம், கிறிஸ்துராஜபுரம், அருள்புத்துார் கிராமங்கள் உள்ளன.
அருள் புத்துார் கிராமத்தில் தேவியாற்று நீர் வழி செல்லும் பாதையில் வெள்ளத்தின் போது பள்ளி மைதான வளாகம் உள்ளிட்டவை தண்ணீர் பெருக்கெடுக்கிறது. வடியும் வரை கிராமத்தினர் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். ஆற்றில் ஆக்கிரமித்துள்ள செடிகள், புதர்களை அகற்ற வேண்டும்.
வடக்கு பகுதி குடியிருப்புகளில் வடிகால் இல்லாததால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துராஜபுரம் கிராமத்தில் ரேஷன் கடை ஒழுகுவதால் பொருட்கள் பாழாகும் அபாயம் உள்ளது.
மயான ரோடு செம்மண் தரையாக போட்டுள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது. கோயில் தெரு, வடக்கு தெரு பணிகளை பாதியில் விட்டுள்ளனர். இங்கு தனிநபர் கழிப்பறை முறையாக கட்டப்படாததால் மகளிருக்கான பொது கழிப்பறை வசதியை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றனர்.
கல்லுப்பட்டி, அருள்புத்துார், கிறிஸ்துராஜபுரம் கிராமங்களில் விடுபட்ட பகுதிகளுக்கான புதிய ரோடு பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
கண்மாய், ஆற்றுப்பகுதியாக இருப்பதால் பராமரிப்பற்ற நாய்கள் பெருகி குடியிருப்பு வாசிகளுக்கு தொல்லை அதிகரிக்கிறது. கொசுக்களின் தொந்தரவால் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. கிராமங்களின் புதிய குடியிருப்புகளுக்கு தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும்.
நிதி நிலைக்கு எற்ப வசதிகள்
--வள்ளியம்மாள், ஊராட்சி தலைவி: அருள்புத்துார் கிராம மகளிர் சுகாதார வளாகம் ஓடையை ஒட்டி உள்ளது. இதில் பெருகும் நீர் கசிவதால் கழிவு தொட்டி மூழ்கி விடுகிறது. முழு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். குடியிருப்புகளில் கண்மாய் நீர் கசிவதுடன் அங்கீகரிக்கபடாத வீடுகள் உள்ளது. வடிகால் வெளியேற்றவும் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளதால் சிக்கல் ஏற்படுகிறது. கல்லுப்பட்டி, அருள் புத்துாருக்கு ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டடம் வசதி செய்யப்பட்டுள்ளது.நிதி வசதிக்கு ஏற்ப தேவையான வசதிகள் செய்து தரப்படும்.