/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
16 பெட்டிக்கடைகளுக்குரூ. 4 லட்சம் அபராதம்
/
16 பெட்டிக்கடைகளுக்குரூ. 4 லட்சம் அபராதம்
ADDED : மே 28, 2024 05:37 AM
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் தடை புகையிலை விற்பனை செய்த 16 பெட்டிக்கடைகளுக்கு ரூ. 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தடை புகையிலை பதுக்கல், விற்பனை செய்வதை தடுக்க உணவுப் பாதுகாப்பு துறை, போலீசார் இணைந்து மே 19 முதல் மே 25 வரை பெட்டிக்கடைகள், வாகனங்களில் சோதனை செய்தனர். இதில் 16 பெட்டிக்கடைகளில் 20 கிலோ 350 கிராம் தடை புகையிலை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல் வைத்து ரூ. 4 லட்சம் அபராதம் விதித்தனர்.
முதன் முறை தடை புகையிலை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ. 25 ஆயிரம் அபராதம், 15 நாள்களுக்கு கடைக்கு சீல், இரண்டாவது முறை ரூ. 50 ஆயிரம் அபராதம், ஒரு மாதம் சீல், மூன்றாவது முறை ரூ. 1 லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு சீல் வைக்கப்படும். இந்த சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.