/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2 கி.மீ., துாரத்தில் 20 வேகத்தடைகள்; விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்
/
2 கி.மீ., துாரத்தில் 20 வேகத்தடைகள்; விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்
2 கி.மீ., துாரத்தில் 20 வேகத்தடைகள்; விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்
2 கி.மீ., துாரத்தில் 20 வேகத்தடைகள்; விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மே 06, 2024 12:11 AM
சிவகாசி : சிவகாசியில் பைபாஸ் ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரையிலான இரு கி.மீ., துாரத்தில் 20 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விழி பிதுங்குகின்றனர்.
சிவகாசி வேலாயுதரஸ்தா ரோடு விலக்கிலிருந்து பஸ் ஸ்டாண்ட் இரண்டு கி.மீ., துாரம் உள்ளது. இந்த ரோட்டில் 50 மீ, 100 மீ, என்ற இடைவெளியில் 20 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரோடு என்பது வாகனங்கள் தடையின்றி செல்வதற்காக தான். பள்ளி, கல்லுாரி அருகே, வளைவு பகுதி, விபத்து ஏற்படும் இடங்களில் வேகத்தடை அமைக்கலாம். ஆனால் இங்கு அடுத்தடுத்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் அவசரத்திற்கு வருகின்ற ஆம்புலன்ஸும் இதனால் சிரமப்பட நேரிடுகின்றது. குறிப்பிட்ட நேரத்திற்கு எங்கேயும் செல்ல முடியவில்லை. எனவே வேலாயுத ரஸ்தா ரோடு விலக்கில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை தேவைப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.