/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தடை புகையிலை ஆய்வில் 243 கடைகள், 26 வாகனங்கள்; ரூ.62.60 லட்சம் அபராதம்
/
தடை புகையிலை ஆய்வில் 243 கடைகள், 26 வாகனங்கள்; ரூ.62.60 லட்சம் அபராதம்
தடை புகையிலை ஆய்வில் 243 கடைகள், 26 வாகனங்கள்; ரூ.62.60 லட்சம் அபராதம்
தடை புகையிலை ஆய்வில் 243 கடைகள், 26 வாகனங்கள்; ரூ.62.60 லட்சம் அபராதம்
ADDED : ஆக 29, 2024 04:45 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஜன. முதல் ஆக. 24 வரை உணவுப்பாதுகாப்புதுறை, போலீசார் நடத்திய ஆய்வில் 243 கடைகள், 26 வாகனங்களில் இருந்து 1114 கிலோ 976 கிராம் தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 62.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஜன. 1 முதல் ஆக. 17 வரை உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து தடை புகையிலை பதுக்கல்,விற்பனை குறித்து செய்த சோதனையில் 238 கடைகள், 23 வாகனங்களில் இருந்து 1094 கிலோ 851 கிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 60 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஆக. 18 முதல் ஆக. 24 வரையிலான ஒரு வாரத்தில் 5 கடைகள், 3 வாகனத்தில் இருந்து 20கிலோ 125 கிராம் தடை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக தடை புகையிலை விற்பனை செய்தால் ரூ. 25 ஆயிரம்அபராதம், 15 நாட்கள் கடைக்கு சீல், 2வது முறை ரூ. 50 ஆயிரம் அபராதம், ஒரு மாதம் சீல், 3வது முறை ரூ. 1 லட்சம் அபராதம், மூன்று மாதங்கள் கடைக்கு சீல் வைக்கப்படும்.
இச்சோதனை தொடர்ந்து நடத்தப்படும். அதில் தடை புகையிலை பதுக்கல், விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.