/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்க இலக்கு
/
3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்க இலக்கு
3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்க இலக்கு
3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்க இலக்கு
ADDED : மே 31, 2024 06:47 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 20 கி தக்கைப் பூண்டு விதைகள் 50 சதவித மானியத்தில் வழங்கப்படும் என கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் தெரிவித்தார்.
அவரது செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 2024 -- 25 ஆண்டு முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர உற்பத்தி ஊக்குவித்தல் செயல்படுத்தப்படவுள்ளது.
தற்போது உள்ள தொழில் முறை வேளாண்மையில் ஒரே பயிரை சாகுபடி செய்வதால் மண்ணில் இருந்து சத்துக்களை அதிகமாக உறிஞ்சும் பயிர்களை சாகுபடி செய்வதால் மண் வளம் குறைந்து வருகிறது.
உற்பத்தி அதிகரிகப்பதற்காக அதிக ராசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி மருந்து பயன்படுத்துவதால் நுண்ணுயிர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.
மண்வளத்தை பேணவும், மக்கள் நலனை காக்கவும் விதமாக உயிர்ம வேளாண்மை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயனடையலாம். மேலும் தங்கள் நில ஆவணங்களுடன் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறலாம் என்றார்.