/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 21, 2024 03:55 AM

விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் 4 அடுக்கு பாதுகாப்புகளுடன் வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில் உள்ள 1689 ஓட்டுச்சாவடி மையங்களில் ஏப். 19ல் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில் ஓட்டுப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையங்களில் விருதுநகர் லோக்சபா தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா, கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் தொகுதி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரஙகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மத்திய பாதுகாப்பு படை, தமிழக அரசின் சிறப்பு போலீஸ், ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு போலீசார் என 545 பேருடன் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை சி.சி.டி.வி., மூலம் ஒதுக்கப்பட்டுள்ள அறையில் 24 மணி நேரமும் கண்காணித்து கொள்ளலாம். மாவட்ட நிர்வாகம் மூலம் 24 மணி நேரமும் அறைகளை கண்காணிக்க உயர் நிலை அலுவலர்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

