/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் 50,000 பக்தர்கள் வழிபாடு
/
சதுரகிரியில் 50,000 பக்தர்கள் வழிபாடு
ADDED : ஆக 05, 2024 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி கோவிலில் நேற்று நள்ளிரவு முதல் பக்தர்கள் திரண்டதால் அதிகாலை 3:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை தாணிப்பாறை வழியாக 38,000 பேர், வாழைத்தோப்பு பாதை வழியாக 13,000த்திற்கும் மேற்பட்டவர்கள் மலையேறினர்.
கோவிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகங்களுடன் அமாவாசை வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.