/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீர்
/
குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீர்
ADDED : ஜூன் 14, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துார்: திருமங்கலம்--கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சேத்துார் காமராஜர் நகர் அருகே ரோட்டில் செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு அடுத்து தொடர்ந்து தண்ணீர் அருகில் உள்ள கால்வாயில் வீணாகி வருகிறது.
கோடையில் அத்தியாவசிய தேவைக்காக சேமித்து பயன்படுத்த வேண்டிய குடிநீர் வீணாவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து கணேஷ்: குழாய் புடைப்பு சேதங்களை உடனுக்குடன் சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் இப்பகுதி செல்வோர் மீது வாகனங்கள் தண்ணீர் வாரி இரைப்பதுடன் கசிவும் அதிகமாகி வருகிறது. விரைந்து சரி செய்ய வேண்டும்.