/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.80 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு
/
ரூ.80 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு
ADDED : மே 07, 2024 09:37 PM
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்ஜினியரிடம் ஆன் - லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லாபம் என ஆசை காட்டி, 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்தவர் ஜான் ஸ்டாலின் பிரான்சிஸ்,48. இன்ஜினியர். இவருக்கு ராஜபாளையம் சின்ன சுரைக்காய் பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம்,47, அவர் மனைவி வாசுகி, 40, ஆகியோர் அறிமுகமாகினர்.
தம்பதி ஆன் லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர்.
அதை நம்பிய ஜான் ஸ்டாலின், இரு ஆண்டுகளுக்கு முன், 80 லட்சம் ரூபாயை தம்பதியிடம் கொடுத்தார். ஆனால், அதிக லாபம் கிடைக்காததால் பணத்தை திருப்பி கேட்டதற்கு தராமல் ஏமாற்றி வந்தனர்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

