ADDED : ஜூன் 25, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : அருப்புக்கோட்டை சிங்கார தோப்பு முதல் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் மகன் சிவ கணேஷ் 20. இவர் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன் கோவிலில் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று சிவகணேஷ் தனது நண்பர் ஸ்ரீவரதனுடன் எம்.புதுப்பட்டியில் உள்ள நீச்சல்குளத்தில் குளிப்பதற்காக டூவீலரில் வந்தார்.
மதியம் 3:45 மணி அளவில் காளையார்குறிச்சி அருகே சென்ற போது எதிரே வந்த கார் டூ வீலர் மீது மோதியதில் சிவகணேஷ் உயிரிழந்தார். ஸ்ரீவரதன், கார் ஓட்டி வந்த சிவகாசி சாட்சியாபுரத்தைச் சேர்ந்த செல்வம் 47, காயமடைந்தனர். எம். புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.