ADDED : மே 28, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி அருகே நாய்கள் விரட்டியதால் தப்பி ஓடிய மானை கதவை அடைத்து பாதுகாத்து வைத்திருந்தனர். நாய்கள் சென்றதும் திறந்து விட்டதால் மலைக்கு தப்பி ஓடியது.
ராஜபாளையம் சஞ்சீவி மலைச் சரிவில் குடிநீருக்காக இறங்கி வந்த 4 வயது ஆண் மானை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் விரட்டியதால் அங்கு இருந்த காம்பவுண்டு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தது. அப்பகுதியினர் கதவை மூடி வைத்து மானை காப்பாற்றினர். நாய்கள் சென்ற சிறிது நேரத்திற்கு பின் கதவை திறந்து விட்டனர். மான் மலை பகுதிக்குள் ஓடிச் சென்றது.
வன விலங்குகளை பாதுகாக்கும் விதமாக வனத்துறையினர் மலையில் தண்ணீர் தொட்டிக்கு ஏற்பாடு செய்வதுடன் ரோட்டில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.