ADDED : மே 08, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை ; அருப்புக்கோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு மான் பலியானது.
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி, சிதம்பராபுரம், சேதுராஜபுரம் பகுதியில் உள்ள கண்மாய்களின் காட்டுப்பகுதிகளில் உள்ள மான்கள் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வந்து விடுகின்றன.
நேற்று காலை 9:30 மணிக்கு செட்டிகுறிச்சி அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழி ரோட்டை கடக்க முயன்ற மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானது.

